வெள்ளி, 11 மார்ச், 2011

காதற் பிறப்பு


எனது மவுனம்(இருபது ஆண்டுகளுக்குப் பின் நான் எழுதியிருக்கும் காதல் கவிதை)

எனது மொழி
எனது புன்னகை
எனது அசைவு
எதுவும் புரியாதவளாய்

எப்போதும் என்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருப்பதாய்

பாவனை செய்கிறாய்.

ஆயினும் நானறிவேன்
என் உயிரின் ஆழத்தில்;
ஆண் பெண் உறவின்
அதீத உள்ளுணர்வில்
நான் அறிவேன்
உன்னுள் என்னில்
உயிர்ப்பெற்றிருக்கும்
உறவை.

இன்னுமொன்றும் அறிவேன்
பெண்ணே;
இம்மியும் வழுவாத
இயற்கையின் நியதியை;
உயிர்ப்பெறுதலுக்கும்
உருப்பெறுதலுக்குமான
இடைவெளியை.

காத்திருக்கிறேன்
காத்திருப்பேன்

காதற் பிறப்புக்காய்.