மழை பொழியும் மாலைப்
பொழுதொன்றில் சற்று நின்று நிதானித்து ஓடும் நீரை ஒருமுறை பார்த்ததுண்டா நண்பர்களே? யாருக்காகவும் எதற்காகவும் காத்து நிற்காமல், இயற்கையோடு
இசைந்து ஓடிக்கொண்டே இருக்கும் நீர் சொல்லும் சேதி மகத்தானது. வாய்ப்பு கிடக்கும் போதெல்லாம் புதுப் பாதை வகுத்து,
எதிர்ப்படும் தடைகளை தகர்த்தெறிந்து, மேடுகளை கடக்க நின்று நிதானித்து பலம் சேர்த்து,
பள்ளங்களில் சட்டென நீர்வீழ்ச்சியாய் வீழ்ந்து தெறித்து, சிறுகற்களை மூழ்கடித்து, மிரட்டி
நிற்கும் பெருங்கற்கள் முன் பணிந்து பின் அதனைச் சுற்றி வளைந்து நெளிந்து பயணிக்கும்
நீர் எப்போதும் தன் இயல்பிலிருந்து மாறுவதில்லை.
அதன் விரைவிலும் ஒரு தளர்வு; ஆக்ரோஷத்திலும் ஓர் அமைதி. பயணம் ஒன்றே அதன் குறிக்கோள்! ஓடும் நீர் சொல்லும் பாடம் நம் எல்லோருக்குமானது… - சுப்ரமண்ய
செல்வா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக