கண் விழித்ததும்
ஏங்கி நோக்கும்
கருப்பு வெள்ளைப் படம்
என்னை கண்டறிவாயா?
கைப்பேசி அலறலில்
கை நடுங்கும்
அவன் குரலா...?
கதவுத் தட்டலில்
இதயம் துடித்தடங்கும்
அவன் வரவா?
தபால்காரன் மணியில்
மனம் தத்தளிக்கும்
அவன் மடலா?
ஏமாற்றங்கள் எழுச்சியூட்டும்
தள்ளாமை தள்ளிப் போகும்
ஈரக்கண் துடைத்து
வீர நடை தொடங்கும்.
நீ வேண்டும் மகனே
நீ வேண்டும்
என் சிதைக்கு தீ மூட்ட
நீ வேண்டும்
இன்று எங்கு போராட்டம்?
- சுப்ரமண்ய செல்வா -
ஏங்கி நோக்கும்
கருப்பு வெள்ளைப் படம்
என்னை கண்டறிவாயா?
கைப்பேசி அலறலில்
கை நடுங்கும்
அவன் குரலா...?
கதவுத் தட்டலில்
இதயம் துடித்தடங்கும்
அவன் வரவா?
தபால்காரன் மணியில்
மனம் தத்தளிக்கும்
அவன் மடலா?
ஏமாற்றங்கள் எழுச்சியூட்டும்
தள்ளாமை தள்ளிப் போகும்
ஈரக்கண் துடைத்து
வீர நடை தொடங்கும்.
நீ வேண்டும் மகனே
நீ வேண்டும்
என் சிதைக்கு தீ மூட்ட
நீ வேண்டும்
இன்று எங்கு போராட்டம்?
- சுப்ரமண்ய செல்வா -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக