இதைப்போல் மனதின் பரிணாமம் மிகுந்திடின் மனிதகுலம் மேன்மையுறும். எல்லோரும் இன்புற்றிருத்தல் சாத்தியமாகும். அது என்ன மனதின் பரிணாமம்? உடலளவில் மனிதன் மாறியிருப்பினும், குணத்தளவில் விலங்கினப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. சீறும் பாம்பும், தந்திர நரியும், நிறம் மாறும் பச்சோந்தியும், குரூர கொடுமிருகங்களும் அவ்வப்போது தலைக்காட்டி தம் இருப்பை பறைச்சாற்றிச் செல்கின்றன. இந்த விலங்கினப் பதிவுகளின் நிரந்தர வெளியேற்றமே மனதின் பரிணாமம்.
'மனிதன் என்பதன் பொருள் மனது இதமானவன்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி. இதமான மனதிற்கு உரித்தாதல் மனதின் பரிணாமம்.
அன்பும் கருணையுமே இதமான மனதின் அடையாளங்கள். பிறருக்கு துன்பம் தராது இருத்தல் அன்பு. எம்மால் இயன்ற அளவில் பிறர் துன்பம் போக்குதல் கருணை. எல்லா மதங்களின் சாராம்சமும் இதுவே.
- சுப்ரமண்ய செல்வா - #செல்வாசகம்
Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/
4 கருத்துகள்:
அருமை.
அன்பே சிவம்
கருணையே சக்தி.
இறைவன் உண்டு.அதை அடைய வேண்டும் உணர வேண்டும்...தத்துவம்
மட்டும் உள்ளத்தில் இருந்தால் ஆணவம் வரும்...
மிக்க நன்றி.
உண்மை.
கருத்துரையிடுக