நனவாகக் கூடிய எத்தனையோ கனவுகள் நனவாகாமல், அடையக்கூடிய எத்தனையோ வெற்றிகள் அடையப்படாமல், புரியக்கூடிய எத்தனையோ சாதனைகள் நிகழாமல் இருப்பதற்கு காரணம் தொடக்கச் சிக்கல் (starting trouble).
நம்மால் ஒன்றை சாதிக்க முடியும் என்று நன்கு தெரிந்திருந்தும் எல்லாம் சரியாக அமையட்டும் என்று காத்திருக்கிறோம். தயக்கம் காரணமாக தள்ளிப்- போடுகிறோம்; அல்லது காரணம் எதுவுமின்றி காலந்தாழ்த்துகிறோம்.
இது சிறிய செயல்களிலிருந்து பெரும் சாதனைகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். உண்மையில் கச்சிதமான தொடக்கம் கச்சிதமான முடிவு என்று எதுவுமில்லை. ஆயிரம் மைல் பயணம் ஒற்றைக் காலடியில் தொடங்குகிறது. பயணத்தில் வரக்கூடிய தடங்கல்களை, சவால்களைப் பற்றி எண்ணிக்-கொண்டிருந்தால் எப்போது பயணத்தை ஆரம்பிப்பது?
நம்மால் காற்றின் திசையை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நமது கப்பலின் பாயை மாற்றிக் கட்டி இலக்கை அடைய முடியும்.
'எண்ணித் துணிதல்' நன்றுதான். ஆனால் எவ்வளவு காலம்தான் எண்ணிக்கொண்டே இருப்பது? ஏதாவது ஒரு புள்ளியில் தொடக்கம், இடையிடையே சின்னச்சின்ன திருத்தங்கள், மேம்படுத்தல்கள் - இவையே வெற்றிப்பயணத்திற்கான விதிமுறைகள்.
தொடக்கமும், முடிவும் போலவே பயணமும் முக்கியம். சென்றடையும் இலக்கைப் போலவே இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் கிடைக்கும் அனுபவங்களும் பெறுமதியானவை.
சிலவேளைகளில் சேருமிடத்தை சென்றடைய சிறுது நேரம் ஆகலாம். ஆனால் அனுபவித்து பயணித்தால் பயணக்களைப்பின்றி இலக்கை அடையலாம்.
- சுப்ரமண்ய செல்வா - #செல்வாசகம்
Latest YouTube Video
2 கருத்துகள்:
அருமை வாழ்க வளர்க
மிக்க நன்றி / சுப்ரமண்ய செல்வா
கருத்துரையிடுக