இன்னுமொரு வயதின் பிறப்பை
கண்ணுரும் வரம் எனக்கு
தந்தனை இறைவா முதல் நன்றி
பெற்றெடுத்த அன்னைக்கு நன்றி
உற்ற துணைநின்ற தந்தைக்கு நன்றி
கற்றுத்தந்த கடவுளர்க்கு நன்றி – தனை
பற்றத்தந்த குருவுக்கு நன்றி
சக உதிரங்களுக்கு நன்றி
சக பயணி சகியே துணையே நன்றி
இகவாழ்வை இனிதாக்கும் இரு
மகன்மாரே மிக நன்றி
உறவே நன்றி உயிர்நட்பே நன்றி
மறவேன் பணியணியே நன்றி
பிறப்பிதனை பொருளுளதாக்கி
சிறப்பிக்கும் வாழ்வே நன்றி
பிறப்பினியொருமுறை பெருவேனெனின் இப்
பிறப்பே ஈதல் வேண்டுமென்பேன்
வரங்கள் நிறைந்த பெருவாழ்விது - நன்றி
மறவா குணத்தில் நாயும் நானும் ஒன்று!
நன்றி!
=== சுப்ரமண்ய செல்வா ===
கண்ணுரும் வரம் எனக்கு
தந்தனை இறைவா முதல் நன்றி
பெற்றெடுத்த அன்னைக்கு நன்றி
உற்ற துணைநின்ற தந்தைக்கு நன்றி
கற்றுத்தந்த கடவுளர்க்கு நன்றி – தனை
பற்றத்தந்த குருவுக்கு நன்றி
சக உதிரங்களுக்கு நன்றி
சக பயணி சகியே துணையே நன்றி
இகவாழ்வை இனிதாக்கும் இரு
மகன்மாரே மிக நன்றி
உறவே நன்றி உயிர்நட்பே நன்றி
மறவேன் பணியணியே நன்றி
பிறப்பிதனை பொருளுளதாக்கி
சிறப்பிக்கும் வாழ்வே நன்றி
பிறப்பினியொருமுறை பெருவேனெனின் இப்
பிறப்பே ஈதல் வேண்டுமென்பேன்
வரங்கள் நிறைந்த பெருவாழ்விது - நன்றி
மறவா குணத்தில் நாயும் நானும் ஒன்று!
நன்றி!
=== சுப்ரமண்ய செல்வா ===
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக