புதன், 14 செப்டம்பர், 2016

கரங்களல்ல வரங்கள்..

வெற்றி பெறுகையில்
தட்டிக் கொடுக்கும் கரங்கள்
தடுக்கி விழும்போது
எட்டிப் பிடிக்கும் கரங்கள்
தட்டுத் தடுமாறும்போது
இட்டுச் செல்லும் கரங்கள்
சொட்டும் கண்ணீரை
தொட்டுத் துடைக்கும் கரங்கள்
கதறி அழுகையில்
கட்டியணைக்கும் கரங்கள்
இவை வெறும் கரங்களல்ல
வரங்கள்...
-- சுப்ரமண்ய செல்வா --

கருத்துகள் இல்லை: