வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஊடல் பொழுதுகள்

வா கொஞ்சம் பேசுவோம்
நீ நீயாக. நான் நானாக
நமக்குள் ஏன் இந்த நாடகம்?

என்னில் கொஞ்சம் நீ
உன்னில் கொஞ்சம் நான்
இரண்டு சுயங்களின் இழப்புதானே
நம் உறவு

இந்த மௌனம் பொல்லாதது
பேசிய பொழுதுகளில்
மௌனித்திருந்து
பேசாத பொழுதுகளில்
பெருங்குரலெடுத்து பேசுகிறது

அமைதியின் ஆரவாரத்தில்
இரவு விழித்துக் கிடக்கிறது

போதும் உன் போலி நாடகம்
எனக்குத் தெரியும்
விரல் நுனி ஸ்பரிசத்தில்
வீர்யமிழக்கும் உன் கோபம்

வா கொஞ்சம் பேசுவோம்
நீ நீயாக. நான் நானாக

== சுப்ரமண்ய செல்வா ==

கருத்துகள் இல்லை: